"முக்குலத்து முரசு" தங்களை அன்போடு வரவேற்கிறது. தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் - உ.முத்துராமலிங்கத்தேவர் .

இணையமலர் செய்திகள்

Monday, January 31, 2011

பாசத்துடன் பாசறை பிரகாஷ்


பிரிவுகள் பின்னங்கால் பிடரியில் அடிக்க புறப்படட்டும் நம்மை விட்டு....
கள்ளனா என்று கலக்க துடிப்பவனிடமும்.....
மறவனா என்று மனமகிழ்ப்பவனிடமும்.....
சேர்வாரனா என்று சேர நினைப்பவனிடமும்.....
சேர்த்து சொல்லுங்கள் சேர சொல்லுங்கள்.....

பிரித்து செல்பவனிடம் உரக்க சொல்லுங்கள்....
தினவெடுத்த உங்கள் தோள்கள் துடித்து நிற்கட்டும்.....
வீரமான உங்கள் விழிகள் விரிந்து பார்க்கட்டும்.....
இப்போது சொல்லுங்கள் எதிர்ப்பவர்களிடம்......
திமிராக சொல்லுங்கள்.....தேவன் என்று!!!!

திரண்டு வந்த கூட்டமெல்லாம் மிரண்டு போகும்......
மிரட்ட வந்த கூட்டமெல்லாம் விரட்டப்படும்......
தடைகள் எல்லாம் தகர்ந்து போகும்....
அனல் பறக்கும் குருதி தெறிக்கும்.....

அகிலமும் அடிபணியும்.....
ஆமாம் நாங்கள் சேர்ந்து சொல்லும் போது....
சோர்வுகளுக்கும் சொரணை வரும்......இனி

தஞ்சையில் கள்ளனுக்கு தேள் கொட்டினால்......
சிவகங்கை சீமையில் சேர்வாரனுக்கு நெறி கட்டும் .....
மதுரை மறவனின் கைகள் மருந்து தேடும்.....

பிரிப்பவர்கள் பலர்....
சேர்ப்பவர்கள் சிலர்....
அடையாளம் காணுங்கள் பங்காளிகளே.....
பிரிவுகளை புறக்கணிப்போம் --------

-பாசத்துடன் பாசறை பிரகாஷ்

1 comment:

  1. Fantastic thought pangali - Naanum oru thevar magan (Suresh)

    ReplyDelete

Share